வெள்ளவத்தை பொலிஸ் நிலைய பொலிஸாருக்கு மிகவும் விபரீதமான முறைப்பாடு ஒன்று கிடைக்கப் பெற்று உள்ளது. இது இலங்கைப் பொலிஸாரை பொறுத்த வரையில் விசித்திரமான முறைப்பாடும்கூட. முறைப்பாட்டாளர் பாடசாலைச் சிறுமி ஆவார்.
பெற்றோருக்கு எதிராக இவர் முறைப்பாடு செய்து உள்ளார்.
பேஸ்புக் சமூக இணைப்புத் தளத்தை பயன்படுத்த வேண்டாம் என்று பெற்றோர் இவருக்கு தடை போட்டு விட்டனர் என்பதே முறைப்பாடு.
ஆனால் இம்முறைப்பாட்டோடு சேர்ந்த விடயங்கள் பேரதிர்ச்சி தருபவையாக உள்ளன.
அதாவது நிர்வாணமாக சொந்த புகைப்படங்களை படம் பிடித்து சக நண்பர்களுடன் பேஸ்புக்கில் இச்சிறுமி பகிர்ந்து வந்திருக்கின்றார். இதை கண்டு பிடித்தே பெற்றோர் இவரின் பேஸ்புக் பாவனைக்கு தடை போட்டு இவரை கடுமையாக கண்டித்தும், தண்டித்தும் உள்ளார்கள்.